வாழ்வும் வலியும்
எங்கள் தெருக்களின்
மருங்குகளிளிருந்து தெறிக்கும்
புழுதியின் துணிக்கைகளில்;
முயன்று வெல்லும் விடாமுயற்சியின் விளைதிறனில்;
சளைக்காதவர்களாய்
சரீரம் கொட்டும் ஆத்துமவலிகளில்
குறட்டை விட்டு ஓய்வெடுக்கிறது யதார்த்தம்-வாழ்க்கை.......
அந்த மன நிசப்தத்தின்
நிர்ப்பந்தத்திர்கு அப்பாலும்
ஓங்கி ஒலித்து
இரைகிறது குறட்டை;
தன் இடம் மறந்து
உறக்கம் கொள்ள
முறைக்கும் வாழ்க்கையைத்
துயில்கொண்டெழும்-உலக
நியதி தூக்கிக் கொள்கிறது!
துவளாது.......
மீண்டும் மீண்டுமாய்!
மின்னி மோதும்
பரபரப்பான பகற் பொழுதுகளின்
வசந்தங்களோடு
சேர்ந்து வழிகிறது
மனம்!
-துஜீவ்
Comments
Post a Comment