கனவுகள்

மௌனம்+காதல்+மனம்

என்னைத் துயிலெழுப்புகிறது
உன் மௌனம்!
மீண்டும் உறக்கத்திற்கு அழைக்கிறது
உன் காதல்!
உறக்கத்திலிருந்து விழிப்புக்கு
உன் மௌனமே எனக்கு
மீண்டும் கிடைக்குமென்றால்
உறக்கமே போதுமென
முறைக்கிறது மனம்!
மௌனம்-காதல்
இரண்டுமே
ஒத்த வரிகளின்
வெளிப்படையான பொழுது;
எனக்கு மட்டும் இரண்டுமே
வெவ்வேறாகிறது!
ஆனால், இரண்டுமே
மொழுகடந்தது என்பதால்
விழித்திருக்க வேண்டியது
மனம் மட்டும் தான்.....

 சொநதமென உனக்காய் யாத்த வரிகள்

 சந்தனந் துலங்குமுன் முகத்து வெளிப்பரப்பில்
சிந்தனைச் சிறகொடித்து விஞ்சி
வஞ்சமரின் வரிகளென நினைந்து
பஞ்சமுடன் பாவியனே பருகினேனே!

தஞ்சமென வந்தாய் தரிசனமுந் தந்தாய்
என்னசுகம் இங்கெனக்கு எஞ்சுவதோ நெஞ்சக்கீறு
சுந்தரமும் சுதந்திரமும் இரந்திங்கே பலருள்ளார்
எந்தனுக்கு இவை வேண்டா நீயொன்று போதுமென்பேன்

அன்றொருநாள் அகத்தில் அத்திப்பூ
கண்களிரண்டின் கூர்முனையின் தரிசனம்
என்னை வதம் செய்த மௌனம்.....
இன்னுமின்னும் இறுக்குதடி என்னிதயம்


நீ-நான் -காதல்-யதார்த்தம்
நீயிருந்தும் இல்லாத 
என் முற்றத்து வெளிகளை
நிறைக்கிறது மேகம்!
நீண்ட வெறும்
புற்தரையில் எஞ்சிய
சிறு மரங்களின் 
நிழலாய்-எனக்கு
நினைவுகள் கொடுப்பது
நீ-நான்
நிரம்பிய அந்த 
அடர்வனத்து வெளிகள்
மீண்டு மீண்டுமாய்
வனத்துள்
புதைந்து கிடக்கின்றன
நானும் நீயும் 
வளர்த்த எம் காதல்!
பண்டை அரசரின்
புதையல்களாய்!



Comments

Popular Posts