அமேசன் மழைக்காடு: அதிசயங்கள்


எமது இந்த மனிதப் பிறப்பினுடைய நிலைத்திருப்புக்கு மழைக்காடுகள் கணிசமான பங்களிப்பினை மேற்கொண்டு வருகின்றன. எமது நாட்டின் கன்னிகாடான சிங்கராஜவனமும் அமேசன் மழைக்கடும் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. (சிங்கராஜாக்காடு1840 ல் அரசுடைமையாக்கப்பட்டது, 1988ல் தேசிய வனாந்தரப் பிரதேசமாக்கப்பட்டது, 1989ல் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.)

பூமத்திய ரேகையைச் சூழ வெப்பநிலை உயர்வாய் இருப்பதனால் நீர் ஆவியாகும் தகவும் உயர்வாயே இருக்கின்றது. இதன் விளைவாக மழைக்காடுகளில் மிகுதியான் மழைவீழ்ச்சியும் மழைக்காடுகள் என்ற பெயருக்குக் காரணமும் கிடைக்கப்பெறுகின்றது. 1750 மில்லி மீட்டருக்கும் , 2000 மிமீ க்கும் இடையில் மழைவீழ்ச்சி இருந்தாலே அவை மழைக்காடுகளாகும்.

உலகிலுள்ள விலங்குகள் , தாவரங்களில் மூன்றில் இரண்டு பங்கு அளவானவை மழைக்காடுகளிலேயே வாழுகின்றன.

மழைக்காடுகளின் மண் தரத்தில் மிகவும்  குறைவானதாகும். மண் சிவப்பு நிறம் கொண்டது.

 பூமத்தியரேகைப் பகுதியில் காணப்படும் மழைக்காடுகளின் மொத்த பரப்பளவு 17.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும். இவற்றில் 4.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் உலர்ந்த காடுகளும் அடங்கும்.
மழைக்காடுகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசிய மற்றூம் அவுஸ்திரேலிய தீவுகளைச் சூழ்ந்து காணப்படுகிறன.

 இவை உலகின் 50% தாவர, விலங்கு, பறவை, பூச்சிகள் மற்றும் ஊர்வனவறைக் கொண்டுள்ளதன் மூலமும் கணிசமானளவு மழைவீழ்ச்சியையும் ஒட்சிசனை பெருமளவு விளைவாக்குவதன் மூலமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன.
















அமேசன் மழைக்காடு சம்பந்தமான மேலதிக விபரங்கள்:

பிறேசில், பெரு, கொலம்பியா, வெனிசுவேலா, ஈகுவடோர்,  கயானா, சுரினாம் ஆகிய நாடுகளில் பரந்து காணப்படுகின்றது


 விஸ்தீரணம்- 1.7 பில்லியன் ஏக்கர்கள்.

வருடந்த மழைவீழ்ச்சி 27 மி.மீ.

சிலமரங்கள் 40 மீ உயரத்தைத் தொடுபவை
அந்த மரங்களின் கீழ் சிறிய மரங்களும் புதர்களும்
 மண்டிக்காணப்படும்.

பரந்தளவிலான விலங்கு, தாவர வகைகள்.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள்.

250 வகைகளுக்கு மேற்பட்ட மரங்கள்.

1500 க்குமேற்பட்ட பறவைகள்.

300 வகையான மீனினங்கள்.
 30 மில்லியன் பூச்சிகள்.

இவற்றுள் 10 வீதமான காடு அழிக்கப்பட்டுவிட்டது.

காடுகள் எதிர்நோக்கும் சவால்கள்

சனக்குடித்தொகையின் அபரிமிதமான பெருக்கம்.

மரங்களை அழித்தல்.

 விவசாய நிலங்களின் விரிவாக்கம்.

வேட்டையாடுதல்.

மனிதனின் ஆதிக்கத்தினின்றும் அழிப்பினின்றும் தன்னை விடுவித்து உலகின் அதிசயங்களைத் தாங்கியவாறு நிமிர்ந்து நிற்கிறது அமேசன் மழைக்காடு.

தொகுப்பு: துஜீவ்.







Comments

Popular Posts