மல்லிகைக்கொரு தூது


முற்றத்தில் மட்டும்
முறுக்கேறிய வாசம்
முகங்களில்??
முந்த நாள்
மூன்று தினங்களாய் மட்டும்
முடிவடைந்ததாய் ஞாபகங்கள்!


சுற்றமென்று மல்லிகையே
முற்றத்தில் நிற்பாயாம்
சுழல்கின்ற காற்றோடு
சுகந்தங்கள் சுரப்பாயாம்
நற்குணமே எனதென்று
வெண்காவி தரிப்பாயாம்............
கடந்த பொழுதுவரை
கருகாத சருகுகளால்குடங் குடமாய்க்
குளிரை அள்ளிப்
பருகியதாய் நினைவுகள்


இன்றுனக்கு,
விடந் தந்தார் யரென்று
விடையொன்று தெரியாமல்
பனித்திருக்கும் கண்களுக்கோர்
வகை சொல்வாய் குடைக் கொடியே!


உதயன் 10.03.2010
பக்கம் 07

Comments

  1. மெருகேறியிருக்கிறாய் நண்ப. (

    Word Verifivation ஐ நீக்கி நீயே பின்னூட்டல்களை மட்டறுக்கலாமே)

    ReplyDelete
  2. கணனி விசைப் பலகையில் எழுத்தோவியம் தீட்டத் தொடங்கி சில தினங்களே ஆகின்றன.இன்னமும் சரியான பாதை தெரியாது. உமது கருத்துகளுக்கு நன்றி நண்ப.
    மேலும் முயற்சிக்கிறேன்.
    நன்றியுடன் அருள் நிலவன்

    ReplyDelete

Post a Comment