விடியாத இரவுகள்
எனக்கென்று எழுதப்பட்ட
விடியாத இரவுகளை
வலியோடு தேடுகின்றேன்
குழந்தை ஒன்றின் பிரசவிப்புக்காய் அல்ல….
பிரசவிக்கப்பட்ட குழந்தை ஒன்றின்
நிலைபேற்றுக்காய்…….
உண்மைகளை
உறக்கநிலையில் இருந்து
விழித்தெழுப்ப எனக்கு
வீரியம் போதவில்லை
விழி மூடித் துயிலும்
விழிகள்
வைத்த கனவுகள்
கலையாத மேகங்கள்……….
காலங்கள் கனியாமற் போவதில்லை
மரணங்கள் நிகழாமல் விடுவதில்லை
உதிப்புக்கும் அஸ்தமனத்திற்கும்
அரைவட்ட இடைவெளியே….
ஆனால்இடைவெளியற்ற என்னுணர்வை
எங்கே பொதிந்து வைப்பேன்…?
அருள் நிலவன்
உதயன்
Comments
Post a Comment