சொல்வழி கேளாய் செல்வழியே


பரந்து கிடக்கும் நிலா முற்றத்தில்
குருமண் திட்டுக்கள்!
நான் நடக்கிறேன்.......
சுமையேறிப் போன என்
சுவடுகள் ஆழமாய்த் தான்
பதிகின்ற உணர்வு!
நான் தீர்க்கதரிசியுமல்லன்
சிந்திக்கவும் எனக்கு
சிறு துளி நொடியோ இல்லை
சுவடுகளோ காலங்களால் மற்றப்படலாம்...........
வழியில் மாட்டு மந்தைகளோடு
ஒரு இடையன்அத்தனையும் சேர்த்து
ஒரு விலங்குக் கூட்டம்!
தனியொரு விலங்கு ஆதிக்கம்
மேலோங்குகின்றதே!!
சிந்தனைகள் எங்கோ
தொலைந்து தான் போயினவோ?
என்னைப்போற் கடக்கின்றதா
மணித்துளிகள்?
எனது சுவடுகளை விட
மந்தைச் சுவடுகளின்
ஆழம் புலப்படுகின்றது.........
நான் என்னை உயர்த்திக்
கொள்கிறேன்
செயலோடு-சிந்தனை........


உதயன் 10.03.2010
பக்கம் 07

Comments