இவர்கள் என் வாழ்வில் வெட்டிப்பிரிக்க முடியாத சொந்தங்கள்.... ஏனெனில் இங்கு ஓடும் குருதியின் துணிக்கைகளின் செங்கற்களும் இந்த எழுந்து நிற்கும் அத்திவாரமும் இவர்கள் எனக்கு கொடுத்தவையே!
நீவிர் உருவாக்கி நின்றீர்.....! நின்னரும் புதல்வராய் வாழ்ந்தத காலம் காலங்களோடு காவு கொள்ளப்பட்டன....! பாசமும் பற்றும் தளைகளாய் இறுகக் கட்டிக்கொண்ட போதிலும் பிரபஞ்சப் பொது மொழியெனும் பிணி பீடித்துக் கொண்டது.....! என் நாவெனும் நூலின் இழைகளும் நீண்டு கொண்டன....! நானெனும் நாழிகை எனக்கானதாய் அன்று இருந்திருக்கவில்லை....! அங்கு நிச்சயிக்கப்பட்டவையின் நிதர்சங்கள் நித்தியமாயின....! மீண்டும் மேகக் கூட்டமும் மாரியின் முழக்கமும் முன்சொன்ன தளைகளை திராணியோடு எதிர் கொள்ள...!
ஆயினும் தனித்துவமானதும் எதிர்பார்க்கப்படுவதும் அல்ல யாபேரின்
வாழ்நிலையும்....! உலகின் இயல்பிலும் நியதியிலும் தானே நாங்கள் பாதி
நிரப்பப்பட்ட குவளையாயும் மீதம் வெறுமையாயும்....!
என் நியதியும் மாறும். காலங்கள் சேரும். காத்திருப்பாய்.... மகனே....! கண்வளராயோ....!
Comments
Post a Comment