இந்தப் பத்திரங்கள் பலமுறை படிக்கப்பட்டே கிழிக்கப்படுகின்றன.....
என்னையும் ஒரு மனிதனாய்க் கணக்கிலெடுத்துக்கொண்ட, என்னையும் பேச வைத்த, அமைதியை எனக்குக் கற்றுத் தந்த, தன் வாழ்வுப்பரியந்தத்தில் பகுத்தறிவாளனாய்ப் பரிணமித்துக்கொண்ட ”அண்ணா” என்ற தனியுரிமைக்குரிய தன்னால் சந்திக்கப்பட்ட இடரை இன்னொருவர் சந்திக்கக்கூடாது என நினைக்கும் இந்தப் பெருமகனான அன்ரன் அண்ணா டொக்ரர் அவர்கள் specialist ஆனமைக்கு (பல காலத்தின் பின் இந்தத் தகுதி கிடைக்கப்பெற்ற ஒரு தமிழர்) மனம் மகிழ்ந்து வாழ்த்துச் சொல்கிறோம்.....
எனது தம்பி விபத்தில் படுகாயமடந்த போது என் தூண்களாயிருந்து எனை நிமிர்த்திப் பிடித்ததையும் ஒவ்வொரு நொடியும் எனக்கு ஆறுதலாயிருந்ததையும் மற்றைய எவரும் முன்வரத் தயங்கும் எண்ணுக் கணக்கற்ற உதவிகளை வைத்தியசாலையில் செய்ததையும் இங்கு நினைவிற் கொள்கிறேன்.
இன்றுவரை நான் பயப்படும் ஒரே மனிதர்.....
-துஜீவ்
Comments
Post a Comment