ஆசிரியர்களாய் ஆகிவிட்டோம்; ஆனதனால் கொண்டுவிட்டோம் இந்தக் கோலம்.
ஆசிரியர்களின் வாழ்வில் சந்தோசமென்று
சொல்லக் கூடியது தம் பிள்ளைகளின் கல்வி, திறமை,முன்னேற்றம் மட்டுமல்லாது வாழ்நாளில்
அவர்களின் திருமணம் போன்ற நல்ல காரியங்களிற் பங்கெடுத்தலும் அடங்கும்.
அந்தவகையில் இன்று என் வாழ்வில்
ஒரு மறக்கமுடியாத நாளாகக் கருதுகிறேன். ஆயிரத்தில் ஒரு ஆசிரியருக்கு இன்று எனக்குக்
கிடைத்த பாக்கியம் கிடைக்குமென்பதும் சந்தேகமே!
இன்னும் இளையவனாகவே என்னுள் எண்ண
அலைகள் கரைதட்டிக் கொண்டிருக்கின்றன. நேரம் இன்னமும் என்னைத் தின்று கொண்டிருக்கின்றது.
இந்த அலைகளில் என் ஆசான்களின் சிந்தனைகள் மிதந்து கொண்டிருக்கின்றன.
நானும் என் துணைவியாரும் இன்று
நீராட்டுவிழாவொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தோம். ஆம்! தாய் மாமன் மாமியராய்.... எந்தவிதத்திலும்
தாயாரோ தகப்பனாரோ எனக்கு அறிமுகமானது கிடையாது. ஆயினும் எம் பிள்ளைகளின் மனதினில் எவ்வளவு
ஆழமாய் நாங்கள் (ஆசிரியர்கள்) ஊறிப்போயிருக்கிறோம்....! இந்த உண்மை இன்றுதான் ஒரு புதிருக்கான
விடையாய் என்னிற் தெளிவு கொண்டிருக்கிறது.
நல்லபடி எம் கடமையை முடித்துக்
கொண்டோம். எம் முன்னே விரிந்துகிடக்கும் கடமை, பொறுப்புக்களின் பால் இன்னும் தீவிரமாய்
அக்கறை கொள்கிறோம்.... எம் மாணவரின் பாசச் செறிவு எம்மை அழைத்துச் செல்கிறது....
-அருள்நிலவன்
கடந்த ஆசிரியர் தினத்தன்று தனது கணீரென்ற குரலால் எம்மைச் சொரிந்த, என் கவிதைகளூடு தினத்தினால் எமக்கும் எனக்கும் புகழ் சேர்த்த என் ஆருயிர் நண்பன் ஐக்கிய இரச்சியத்தின் தென்றலின் (வா)னலை சுக்குட்டிக்கு இந்தப் பதிவு.....
நண்பா நாங்கள் உன்னோடு இருக்கிறோம்.....! வார்த்தையால் வாரிச் சுருட்டிக் கொண்டாயே! சுக்குட்டீ.....?

Comments
Post a Comment