உயரப் பற....

இன்று தான் முதன் முதலாய்
சிறகெடுத்துப் பறக்கிறேன்!

எட்டிவிடா உயரத்தை
ஏறிக் கடக்கிறேன்!

என் தலைவாரும் சொந்தம்
யாரும் என்னருகில் இல்லைக் காண்!

வேரான விழுதொன்று பாரினில்

சீரான சிறப்பைப் பார்!

சிறியவனே என்று சிலாகிக்காதே

சிந்திய உன் கண்ணீரத் துடைத்துக் கொள்!

பிந்திய பொழுதினில் என் செய்வோம்- என

வந்திட்ட பொழுதினை எண்ணித் துணி!

உன் வாசமும் வனப்பும் இன்னும்

இந்த வேசத்தைக் கடந்து அழகுறட்டும்....
-அருள் நிலவன்

Comments