பாடக்குறிப்பு தயாரிக்கும் போது கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயங்கள்- ஓர் ஆசிரியருக்கு பாடக்குறிப்பு ஏன் அவசியம்
பாடக்குறிப்பு
தயாரித்தல் என்பது பின்வரும் அனுகூலங்களைப்பிரதானமாக உள்ளடக்கிகிறது.
1 வகுப்பு நேரத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தும்
வகையிலும்
2 மாணவர்களிடத்தே வகுப்பு தொடர்பான நெர்த்தன்மையுடைய
எதிர்பார்ப்புக்களைத் தோற்றுவிக்கவும்
3 வகுப்பின் ஆரம்பம் மற்றும் இறுதி ஒழுங்குகளை
சிறந்த முறையில் நிருவகிக்கவும்
4 சிறந்த இணைப்புள்ள செயலொழுங்கை நிறுவவும்
5 ஏற்படச் சாத்தியமுள்ள இடையூறுகளை வெற்றிகரமாகக்
கையாளவும்
6 வுடுபட்ட விடயங்கள், ஈட்டப்படவேண்டிய
இலக்குகள் தொடர்பான திட்டமிடலை மேற்கொள்ளவும்
7 மேலதிக திறமைக்குரிய பரப்புகளை அணுகவும்
பாடக்குறிப்பு மிகமுக்கியமாகின்றது.
¨
பாடக்குறிப்பு
எழுதும்போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்
1 மாணவர்களுடைய கற்றல்வகை தொடர்பாக அறிந்திருக்க
வேண்டும்.
2 மாணவர்களின் வாசிப்பு நிலை மற்றும் திறன்களையும்
தேடியறியும் மற்றும் தொழிநுட்பம் சம்பந்தமான தேர்ச்சியினையும் அறிந்திருத்தல் வேண்டும்.
3 பாடக்குறிப்பின் மூலம் அடைய எதிர்பார்க்கப்படுகின்ற
தேர்ச்சியை தெளிவாக வகைகுறிக்க வேண்டும்.
4 கற்றல் இடம்பெறக் காரணமாவதற்கு ஆசிரியர்
தான் என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் இருக்க வேண்டும்.
5 மாணவர்களுக்கு வசதியளிக்கப் பயன்படும்
கருவிகளையும் முறைமைகளையும் உள்ளடக்கவேண்டும்.
6 கற்றல் உண்மையில் நடைபெற்றிருக்கிறதா
என்பதை அறிந்து கொள்வதற்கு என்ன மதிப்பீட்டுப் பொறிமுறையைக் கையாள விளைகிறார் என உட்படுத்த
வேண்டும்.
7 கற்றல் இடம்பெறாதோரில் என்ன செயற்பாட்டு
மாற்றத்தை எதிர்பார்க்கலாமென்ற திட்டம் இருத்தல் வேண்டும்.
·
The
correct question to ask when preparing lesson plans is what students are going
to learn, achieve, and accomplish tomorrow and not what the teacher is not to
cover, it is to uncover. Learning has nothing to do with what the teacher
covers. Learning has to do with what the students accomplishes.
(Wong,
2009: 87)
·
Based
on these answers of these questions, teacher should prepare the lesson plan
establishing a variety of instructional strategies focusing on academic
expectations and core content to connect writing to what is being taught.
(Richards,
1998:103-121)
¨
ஒரு
பாடத்திட்டமானது பின்வரும் விடயங்களி உள்ளடக்க வேண்டும்.
1 கறிப்பிக்க விளைகின்ற நோக்கங்கள், கருத்துக்கள்
மற்றும் மாணவர்கள் என்ன கற்கப்போகிறார்கள் என்ற விடயங்கள் இடப்படுதல் வேண்டும்.
2 கற்பிப்பதற்கென ஒதுக்கப்படும் நேர அளவு
குறிக்கப்படல்.
3 சுதந்திரமாக அல்லது மாணவர் ஒரு செயற்பாட்டில்
ஈடுபடுவதற்குரிய நேரம்.
4 ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பயன்படுத்தப்படவுள்ள
உபகரண உதவிகள்.
5 மதிப்பீடு, பிரயோகம் மற்றும் மாணவர் புரிதல்
உதாரணமாக பிரதானமான கேள்விகள் உள்ளடக்கப்பெற்றிருத்தல்.
¨
வேறு
வார்த்தைகளில் சொல்வதெனின் ஒரு வெற்றிகரமான பாடத்திட்டம் என்பது ஒவ்வொரு வகுப்பும்
குறித்த ஒரு குவிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
மாணவரின் ஒவ்வொரு நிமிடமும் திட்டமிடப்படல் வேண்டும். மாணவரின் இயங்குநிலைப்
பங்கேற்புக்குரிய (active participation) முக்கியமான விடயங்களை மீள்வலியுறுத்தும் வகையிலும்;
எவ்வாறு புதிய விடயங்கள் பழையனவற்றோடு பொருந்துகின்றது அல்லது வேறுபடுகிறது என்பதனை
எண்பிக்கவும்; மாணவர்களிடையே சிறந்த அடித்தளமொன்றைக் கட்டியெழுப்பக்கூடிய தகவையும்
கொண்டிருத்தல் வேண்டும்.
அத்தோடு ஆசிரியர்கள்
தேவைக்கு அதிகமான கற்பித்தற் சாதனங்களைப் பயன்படுத்த உத்தேசித்து, குறைந்தவற்றைப் பயன்படுத்தி
எஞ்சியவற்றைச் சேமித்துக்கொள்ள வேண்டும்.
¨
ஒரு
வெற்றிகரமான பாடத்திட்டம் என்பது ஒழுங்குமுறைகளைத் தாபிப்பது மட்டுமல்லாது பாடச் செயன்முறையினை
நிறைவுறுத்தும் போது எவ்வாறான மீள்வலியுறுத்தல்கள் கொடுக்கப்படல் வேண்டும் என்பதனையும்
கட்டமைப்புண்ர்வு, நிலைபேறு, மற்றும் தொடர்பாடல் ஆகிய கற்றல் இடம்பெறுவதற்கு வேண்டிய
எதிர்பார்க்கைகளையும் உள்ளடக்கும்.
(யிங்கர்,
1980:107-127)
¨
பின்வரும்
செயற்பாடுகளை உள்ளடக்குவது வெற்றிக்கு வழிசேர்க்கும்.
®
மாணவர்
வரவெடுத்தல்
®
வேலையைத்
தவறவிட்டொரை விழித்தல்
®
மெல்லக்கற்போர்
தொடர்பான கவனம்
®
பஞ்சணைச்
செயற்பாடுகள்
®
பிரதிபலிப்புக்
குறிப்புக்கள் எழுதுதல்
®
புதிர்களை
உட்படுத்துதல்
®
மூளைத்
தேட்டங்களைப் பயன்படுத்துதல்.
¨
ஒரு
வகுப்பறைச் செயற்பாடு பின்வருமாறு பாடக்குறிப்பொன்றில் பிரிக்கப்படலாம்.
·
தொடங்கற்
செயற்பாடு (3-5 நிமிடங்கள்)
·
விளக்கம்
(15 நிமிடங்கள்)
·
வகுப்பறைச்செயற்பாடு
(15 நிமிடங்கள்)
·
மதிப்பீடு
(5 நிமிடங்கள்)
¨
மேலும்
தவணைக்குறிப்புக்காக பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
(a)
தவணைக்குறிப்பு
மாதிரி.
(b)
ஆசிரியர்
அறிவுரைப்பு வழிகாட்டி
(c)
பாடத்திட்டம்
(d)
பாடநூல்
(e)
நேரசூசி
(f)
பாடசாலை
நாட்காட்டி
(g)
பாடசாலை
வருடாந்தத் திட்டம்
அத்தோடு தரம், பாடம், தலைப்பு, பாடவேளை,
தேர்ச்சி, தேர்ச்சி மட்டம், பாட உள்ளடக்கம், தர உள்ளீடு மற்றும் கற்றற்பேறு ஆகியவை
இடம்பெற வேண்டும்.
¨
பாடக்குறிப்பு
எழுதும் போது கவனத்திற் கொள்ளப்படவேண்டிய கோட்பாடுகள்.
®
அறிகைக்கோட்பாடு
®
உணர்வுக்கோட்பாடு
®
மனவியக்கக்கோட்பாடு
®
சமூகத்திறன்கள்
®
ஆளுமைக்குணவியல்புகள்
முடிபு
ஆக
பாடக்குறிப்பு என்பது ஓர் ஆசிரியர் முழுமையான அறிவை வகுப்பறைச் செயற்பாட்டின் மூலம்
பெறுவதற்கு உதவும் ஒரு சாதனமாகும். அவற்றின் சாதகநிலைகள் ஓர் ஆசிரியருக்கு புரிந்து செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு
பாடக்குறிப்பு அவசியமாகின்றது.
உசாத்துணைகள்:
1.
அமிர்தலிங்கம்,
எஸ், (2022), கற்றல் கையேடுகள்: உயர் பட்டப்ப்டிப்புகள் பீடம், வவுனியா பிராந்தியக்கற்கைகள்
நிலையம், யாழ்ப்பாணம்.
2.
பேர்ணாட்,
க, (2011), ஆசிரியர் கல்வி அனுபவ நோக்கு: ஆசிரியம், கொழும்பு – 11
3.
ஆறுமுகம்,
க, (1989): வகுப்பறைக்கற்பித்தல்.
4.
சின்னத்தம்பி,
மா, (2013): சமுதயத்துக்கானகல்வி, கரிகணன் பிரிண்டேர்ஸ், யாழ்ப்பாணம்.
5.
ஜெயராசா,
சபா, (2009) :கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும், சேமமடு பொத்தகசாலை, கொழும்பு –
11
6.
Carey,
Lou; Dick, Walter (1978), The Systematic Design of Instruction
7.
Jianping Shen, Sue Poppink, Yunhuo Cui and
Guorui Fan (2007)
Lesson Planning: A
Practice of Professional Responsibility and Development
8. Brady, L., & Kennedy, K. (2012). Curriculum construction
09 . Richards,
V, (1998) Effective use of lesson plans to enhance education
10.
Wong, G, (2009), Tensions and paradoxes in
electronic patient record research: a systematic literature review using the
meta‐narrative
method
Comments
Post a Comment