தொழில் வழிப்படுத்துநர் கற்றல்- கற்பித்தல் செயலொழுங்கிலே உத்திகளைப் பிரயோகிப்பதற்கு ஆசிரிய மாணவர்களுக்கு வழிகாட்டுவார் என்ற தேர்ச்சியைப் பங்கு பற்றுநர் அடைதல்

கப்டன் பொன்னம்பலநாதன் துஜீவ்

ஆரோக்கியமான கற்றல் -கற்பித்தல் சூழலை உருவக்குவதற்கு ஆசிரிய மாணவருக்கு உதவுவார் என்ற தேர்ச்சியை மையப்படுத்திய கட்டுரை.

தேவை: வெற்றிகரமான தொழில் வழிகாட்டுதலை கற்றல்- கற்பித்தல் செயலொழுங்கிலே மேற்கொண்டு பழைய நுட்பங்களோடு புதிய நுட்பங்களையும் உட்புகுத்தி பொருத்தமில்லாதன கழித்து பங்குபற்றுநரை வலுவூட்ட வேண்டிய பணி இன்றியமையாததாகும்.

ஒழுங்கு:

1.      பங்குபற்றுநரிடையே தொழில் வழிப்படுத்துதல் சம்பந்தமான பின்வரும் கேள்விகளைக் கேட்டு வெள்ளைப்பலகையிலே குறித்தல்.

a.      தொழில்வழிப்படுத்துதல் என்றால் என்ன?

b.     தொழில் வழிப்படுத்துதலின் முக்கியத்துவம் யாது?

c.      தொழில் வழிப்படுத்துதலுள் அடங்க வேண்டிய கூறுகள் யாவை?

d.     தொழில் வழிப்படுத்துநர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் எவை?

செயற்பாடு 02 (10 நிமிடங்கள்)

கலந்துரையாடல் முறை மூலம்.

2.     அவசியத்தை இனங்காணுதல்.

 

Mentorship is a core value entrenched in imparting knowledge, wisdom, or experience and psychological support relevant to work, career, or professional development. (Mary Beth)

 

பங்குபற்றுநருக்கு உதவும் பொருட்டு அவர்தம் இயலளவை (potential) அறிந்து கொள்வது இன்றியமையாததாவதுடன் தொழில்வழிப்படுத்தப்பெறுநரில் செல்வாக்குச் செலுத்தவும் தொழில்வழிப்படுத்துநர் முனைய வேண்டும்.

3.     

 

 


தன்னை விடவும் அனுபவம் குறைந்தவருக்கு உதவி செய்வதால் தான் நிபுணத்துவம் மிக்கவராகவும் தக்க கலாசாரத் திடர்பினைக் கடத்துபவராகவும் இருக்க வேண்டும்.

4.      ஒரு தொழில் வழிப்படுத்துநருக்கு பின்வரும் விடயங்கள் தேவையானவையாகக் காணப்படுகின்றன:

 

                                                          i.     விருத்தி செய்வதற்குரிய தேவையுள்ள மற்றும் ஆர்வமுள்ள பரப்புகளை இனங்காணல்.

                                                        ii.     பலம், பலவீனங்களை அடையாளம் காணல்.

                                                       iii.     செயல் திட்டமிடலை மெற்கொள்ள உதவுதல்.

                                                       iv.     பாடங்களை அவதானித்துக் குறித்தல்.

                                                        v.     கற்பித்தற் பயிற்சி போன்ற விடயங்களில் பயிற்சி வழங்குதல்.

                                                       vi.     தொழில் வழிப்படுத்தப்பெறுநரோடு நல்ல உறவுமுறையொன்றை உருவாக்கிக் கொள்ளல்.

                                                     vii.     நல்லதொரு முன்னுதாரணத்தினை வழங்குதல்.

5.     

 


உண்மையில் தொழில் வாண்மை வழிப்படுத்துதல் அனைத்து நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும் தேவையானதொன்றாகும்.

செயற்பாடு 03 (10 நிமிடங்கள்)

06 பேர் கொண்ட 05 குழுக்களாகப் பிரித்து.

6.     பயன்பாடு

 

 

தொழில் வழிப்படுத்துநர்

(a)    தங்கள் திறன்களை ஆசிரியர்கள் புத்தக்கம் செய்துகொள்ளவும்

(b)   தங்கள் நிபுணத்துவ நீட்சியை அனுபவிப்பதற்கும்

(c)    வழங்கப்படும் கற்பித்தல் தரமானதாக்கம் பெறுவதற்கும் பயன்படுகிறது.

(d)   அத்தோடு ஒரு சட்டகத்தினை ஆசிரியர்களிடத்திலே உருவாக்கி விருத்தியாக்குவதற்குப் பயன்படுகிறது.

(e)   அவதானிப்பினூடு தொழில் வழிப்படுத்துநர் வெவ்வெறு உபாயங்களைக் கண்டறியவும் வெவ்வேறு முறையியல்களையும் அணுகுமுறைகளையும் முயற்சி செய்யவும் பயன்படுகிறது.

செயற்பாடு 04 (10 நிமிடங்கள்)

பிரிக்கப்பட்ட குழுக்களினுள்ளே கண்டறி முறை மூலம்.

 

7.     நோக்கம்.

 

(a)    பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளுக்கு ஒத்தாசை புரிவதையும்

(b)   மேலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களைப் பகுதியாகப் பிரித்து இனங்காண்பதிலும்

(c)    தொழில் வழிப்படுத்தப் பெற்நர் கூடுதல் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பவும்

(d)   அறிவுடையவராக அவர் மாற்றம் பெறுவதையும்

இது நோக்காகக் கொண்டுள்ளது.

 

8.      தொழில் வழிப்படுத்தல் ஒருபுறம் முறைசார்ந்த அறிவினைக் கடத்துவதுடன் ஆசிரிய வாண்மைக்குத் தேவையான விருத்தியை வழங்குவதிலும் முன்னிற்கின்றது.

9.      பொதுவாக ஒருவர் மற்றவருக்கு உதவியளிக்கும் ஒன்றாகவே இது பார்க்கப்படுகின்றது.

 

10.  வரைவிலக்கணம் கூட்டுதல்.

 

 

நவீன காலப் போக்கின் அடிப்படையில் பலவேறுபட்ட விருத்திப்படிநிலைகளை கருத்திற்கொண்டு செயலொழுங்கு ஒன்றாகவே இது வரைவிடப்படுகிறது.

 

11.  தத்துவம்

நவீன விகொட்ஸியன் மற்றும் சமூக- கலாசாரக் கொள்கைகளின் பிரகாரம் தொழில் தொடர்பான அறிவினையும் அதற்குரிய அறிகை உளவியலையுஇம் பயன்படுத்துவதாகவெ தொழில் வழிப்படுத்துதல் பார்க்கப்படுகின்றது.

செயற்பாடு 05(10 நிமிடங்கள்)

விரிவுரை முறை மூலம்

12.  கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை.

 

a.      உண்மையில் தொழில்வழிப்படுத்தப் பெறுநரின் மனநிலையே முன்னேற்றத்தில் மிகுந்த செல்வாக்கிற்குரியது.

அந்த மனநிலையை மேம்படுத்துவதிலும் நிலைநிறுத்துவதிலும் தொழில்வழிப்படுத்துநர் மிகுந்த கரிசனை கொள்ள வேண்டும்.

b.     பாடக்குறிப்பினை ஆசிரிய மாணவர் எழுதுவதற்கும் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கும் வழிகாட்ட வேண்டும்.

c.      கற்றல்- கற்பித்தல் வலங்களை இனங்காணவும் பராமரிக்கவும் பங்குபற்றுநர்களை நெறிப்படுத்த வேண்டும்.

d.     வினவுதல் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு மாணவர் மைய அணுகுமுறையை மேம்படுத்த உதவுதல் வேண்டும்.

செயற்பாடு 06(10 நிமிடங்கள்)

சிந்தனைக்கிளறல் முறை மூலமும் மதிப்பீட்டு நுட்பத்தினையும் பயன்படுத்தி.

கற்றல் – கற்பித்தல் செயலொழுங்கொன்றில் ஆசிரிவ மாணவரொருவரை அவதானிப்பதற்கான படிவத்தினைக் காட்சிப்படுத்துதல்.

அவதானிப்புப் படிவத்தினை குறிகாட்டிகளின் அடிப்படையில் தொழில்வழிப்படுத்துநர் ஆசிரியமாணவரொருவருக்கு வழிகாட்டலை வழங்கக்கூடிய வழிவகைகளை சிந்தனைக்கிளறல் முறை மூலம் அறிந்து ஒழுங்குபடுத்தி தெளிவூட்டல்.

அவதானிப்புப் படிவம்

குறிகாட்டிகள்

பெற்ற புள்ளிகள்

1.0 பாடத்திட்டமிடல்

1.1 பாட இலக்கினை இனங்காணல்

·        உத்தேச கற்றற்பேறு பாடத்துக்குப் பொருத்தமாயிருத்தல்.

 

·        கற்றற்பேறு நடைமுறைச் சாத்தியமாயிருத்தல்.

 

·        கற்றற்பேறு சரியாகக் குறித்து எழுதப்பட்டிருத்தல்

 

·        கற்றற்பேறு குறிக்கோள் மற்றும் தேர்ச்சிமட்டத்துக்குப் பொருத்தமாயிருத்தல்.

 

·        கற்றற்பேறு அறிவு, திறன், மனப்பங்கு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்.

 

1.2 விடய உள்ளடக்கத்தை தெரிவு செய்தலும்       ஒழுங்குபடுத்தலும்.

·        விடய உள்ளடக்கம் கற்றற்பேறுடன் பொருந்துதல்.

 

·        கற்றற்பேறு சரியாக எழுதப்பட்டிருத்தல்.

 

·        கற்றற்பேறினை அடைந்துகொள்வதற்கு போதியளவு விடய உள்ளடக்கம் அமைந்திருத்தல்.

 

·        பாடவிடயங்களை ஒழுங்குமுறையிலே கட்டியெழுப்பக்கூடிய வகையில் பாடம் ஒழுங்கமைக்கபட்டிருத்தல்.

 

·        பாடவிடயம் மாணவரது நிலை மற்றும் வகுப்பு மட்டத்துக்கு பொருத்தமாயிருத்தல்.

 

1.3 கற்றல் கற்பித்தல் முறைகள், நுட்பங்கள் மற்றும் கற்றல் வளங்களைத் தெரிவு செய்தல்.

·        பாடவிடயத்தினை விளங்கிக்கொள்வதற்கு மிகவும் பொருத்தமானது.

 

·        கற்றல்- கற்பித்தல் வளங்கள் சரியானதாயும் நேர்த்தியானதாயும் இருத்தல்.

 

·        கற்றல் வளங்கள் ஆக்கபூர்வமானதாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தப்பட்டிருத்தல்.

 

1.4 பாடத்திட்டமிடல்

·        மாதிரிப்படிவத்திற்கிணங்க பாடத்திட்டமிடலைத் தயாரித்தல்.

 

·        தெளிவானதாயும் பூரணமானதாயுமிருத்தல்.

 

·        ஒவ்வொரு படிமுறையிலும் வெளிப்படும் பாடவிடயங்களைத் தெளிவாக எடுத்துக்காட்டல்.

 

2.0 பாடத்திட்டமிடற் செயற்பாடுகளை முன்வைத்தல்.

2.1 பாடப்பிரவேசம்

 

·        பாடத்துக்குப் பொருத்தமான பிரவேசம்.

 

·        மாணவர்களது அவதானத்தினை வினைத்திறன் வாய்ந்ததாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.

 

·        முன்னறிவுடன் தொடர்புபடுதல்.

 

·        ஆக்கபூர்வமாயிருத்தல்.

 

·        பாடமானது கற்றலுக்கான ஊக்குவிப்பை வழங்கக்கூடியதாயிருத்தல்.

 

2.2 பாடவிருத்தி

·        கற்றல் – கற்பித்தல் முறைகள், நுட்பங்களை சரியாகப் பயன்படுத்தல்.

 

·        வாய்மொழி அறிவுறுத்தல்கள் மிகத் தெளிவாக இருத்தல்.

 

·        குழு மற்றும் தனியாள் செயற்பாடுகளைப் பயன்படுத்தல்.

 

·        சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான வகையில் கற்றல் வளங்களைப் பயன்படுத்தல்.

 

·        கற்றல் – கற்பித்தல் வளங்களை கற்றலை ஊக்குவிப்பதற்காகப் பங்களிக்க வைத்தல்.

 

·        போதிய வகையில் கற்றல் வளங்களைப் பிரயோகித்தல்.

 

2.4 நேரமுகாமைத்துவம்

·        குறிப்பிட்ட நேரத்தில் பாடத்தினை ஆரம்பித்தல்.

 

·        வேறுபட்ட நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துதல்.

 

·        குறிப்பிட்ட நேரத்தினுள் திட்டமிட்ட செயற்பாட்டினைச் சரியாக நிறைவேற்றுதல்.

 

·        குறிப்பிட்ட நேரத்தினுள் பாடத்தினைப் பூர்த்திசெய்தல்.

 

2.5 ஆசிரிய – மாணவர் தொடர்பு

·        ஆசிரிய மாணவர் உறவினைக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் பாடத்தினைக் கற்பித்தல்.

 

·        ஆசிரியர் – மாணவர்களுக்கிடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தல்.

 

·        விசேட தேவையுடையோரை இனங்கண்டு தேவையான உதவிகளை வழங்குதல்.

 

·        ஜனநாயகச் சூழலை உருவாக்குதல்.

 

2.6 வகுப்பறை முகாமைத்துவம்.

·        வகுப்பறையில் பொருத்தமான ஆசிரியர் இடப்படுதலும் நடமாட்டமும்.

 

·        பொருத்தமான வகுப்பறைத் தயார்ப்படுத்தல்.

 

·        இடையூறான நடத்தைகளைக் கட்டுப்படுத்துதல்.பொருத்தமான வழிகாட்டலில் ஈடுபடுதல்.

 

2.7 பாடத்தினைப் பூர்த்திசெய்தல்

·        பாடத்தின் சாராம்சம்.

 

·        சாராம்சத்தின் போதுமை.

 

·        கற்றல் நீடிப்பு பிற்செயற்பாடுகளில் ஈடுபடுதல்.

 

3.0 கணிப்பீட்டு, மதிப்பீட்டு முறைகள்.

·        பொருத்தமான கணிப்பீட்டு உபகரணம்.

 

·        தகுதியான கணிப்பீட்டு உபகரணம்.

 

·        பொருத்தமான பின்னூட்டல்.

 

·        கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டினை மேற்கொள்ளுதல்.

 

·        பொருத்தமான பரிகார நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

 

4.0 ஆசிரியர் நடத்தைக்குரிய விசேட பண்புகள்.

·        தன்னம்பிக்கையுடன் செயற்படல்.

 

·        சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளல்.

 

·        பாடவிடயம் தொடர்பான பரந்த அறிவு.

 

·        குரல் கட்டுப்பாடு.

 

 

 

 

13.  தொழில் வழிகாட்டுநர் ஒருவர் பின்வரும் திறன்களை விருத்தி செய்துகொள்ள வேண்டும்.

 

                                                          i.     புதிய கருத்தியல்களையும் இயல்புகளையும் ஆற்றல்களையும் வரவேற்கும் திறனுடையவராயிருத்தல்.

                                                        ii.     பற்றுணர்வும் பரிவுணர்வும் மிக்கவராக இருத்தல்.

                                                       iii.     சிறந்த செவிமடுப்பாளராக இருத்தல்.

                                                       iv.     எதிர்வினை ஆற்றும் திறனைக் கொண்டிருத்தல்.

                                                        v.     தர்க்கரீதியில் பிரச்சினையை அணுகும் தகவுடையவராக இருத்தல்.

                                                       vi.     தொழில்வழிகாட்டப்பெறுநரை அக்கறையுடன் வழிப்படுத்தும் பொறுப்புடன் இருக்கிறார் என்ற உணர்வை மேம்படுத்தும் வகையில் செயற்படல்.

                                                     vii.     பொழிப்புக்கூறும் திறனுடையவர்.

                                                    viii.     பதிவேடுகளைப் பேணுபவராயிருத்தல்.

                                                       ix.     பொருத்தமான இடத்தில் பொருத்தமான கேள்விகளை எழுப்பி சிந்தனைக் கிளறலூட்டுபவராக இருத்தல்.

 

மேற்படி விடயங்களை கலந்துரையாடல் மூலமும் சிந்தனைக் கிளறல் மூலமும் பங்குபற்றுநரின் முன் அனுபவத்துடன் தொடர்புபடுத்தி நோக்கம், கவனிக்கப்பட வேண்டியவை, வரைவிலக்கணம் ஆகியவற்றுக்குரிய விடயங்களைப் பெற்று தொகுத்து ஒழுங்கமைவாக்கி இலத்திரனியல் உபகரண உதவியோடு முன்எறிகைக் கருவியைப் பயன்படுத்தி மேற்சொன்ன விடயங்கள் முழுமையாக அணுகப்பெறுவதற்கு வழிகாட்டுவேன்.

உசாத்துணைகள்:

                                                                             i.          Dr. Petrovska, S et al.,  (2018), Mentoring in teaching profession.

                                                                            ii.          Mickovska, G., Kondik Mitkovska, V., Georgieva, L.,
Stamboliev, A & Reci, B. (2013). Analysis of
the policies and practice of professional and ca-
reer development of teachers in the Republic of
Macedonia, Skopje: Macedonian Civic Educa-
tion Center (MCEC)

                                                                           iii.          Ingersoll, R., & Kralik, J. M. (2004). The impact of men-
toring on teacher retention

                                                                           iv.          Ristovska, S et al. (2016). Guideline on the manner and
form of providing mentoring support to novice
teachers and novice student support staff in pri-
mary and secondary schools, Skopje: Macedo-
nian Civic Education Center

                                                                            v.          Washburn-Moses, L. (2010). Rethinking mentoring:
Comparing policy and practice in special and
general education.

                                                                           vi.          Dougherty, T.W. & Dreher, G.F.  (2007) Mentoring and Career Outcomes

                                                                         vii.          Bozeman, B. & Feeney, M.K. Toward a Useful Theory of Mentoring. Administration & Society (2007).

                                                                        viii.          Anderson , L., Silet, K. & Fleming, M. Evaluating and Giving Feedback to Mentors: New Evidence-Based Approaches. (2012).

                                                                           ix.          Eby, L.T., Allen, T.D., Evans, S.C., Ng, T. & DuBois, D.L. Does mentoring matter? (2008).

                                                                            x.          Nguyen, F.T. The birth of the American Physician Scientists Association--the next generation of Young Turks. Journal of Clinical Investigation (2008).

                                                                           xi.          Reynolds, H.Y. Mentoring. Nurturing clinician and physician scientists in an academic career(2007).

                                                                         xii.          M. Schmidt, Mentoring and being mentored: the story of a novice music teacher's success (2008)


Comments

Popular Posts