துண்டக்கற்பித்தலில் (Block Teaching) ஒரு அம்சமான வகுப்பறைச் செயற்பாட்டில் உட்படுத்திய அனுபவம் பெறுதலில் இடம்பெறும் விடயங்கள். இதன்மூலம் பயிற்சிக்கு அனுப்பும் நிறுவனம் எதிர்பார்க்கும் விடயங்கள் எவ்வாறு அடையப்படுகின்றன.


Captain Ponnambalanthan Thugeev 

a)    துண்டக் கற்பித்தல் என்பது மிகக் குறுகிய காலத்தில் ஒடுக்கி (condensed) ஒரு பாடநெறியின் இடையில் தமது அறிமுறைக் கற்றல் அனுபவங்களை செயன்முறையூடு பிரயோகித்துப் பார்ப்பதற்கும் பிற அனுபவம் மிக்க ஆசிரியர்கள், பதிவேடுகள், பாடசாலைச் சூழல் ஆகியவற்றின் அறிமுகத்தையும் பார்வையையும் களத்தின் அவதானிப்புக்களூடும் பங்கேற்றலினூடும் வளமாக்கிக் கொள்வதற்கும் குறித்து ஒதுக்கப்பட்ட காலத்துள் ஒருதடவையில் பங்கேற்கும் ஒரு முறையியல் வடிவமாகும். இது ஒரு கிழமை அல்லது இரண்டு கிழமைகள் என்பதாக மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலைமையைக் கொண்டிருக்கும்.

 

b)     இது விகொட்சியின் சமூகக் கட்டுருவாக்கக் கொள்கையினை அடியொற்றியதாகும்.

 

c)      மேலும் பியாஜே மற்றும் பெர்ரி ஆகியோரின் அறிகைக்கட்டுருவாக்கத்தோடும் தொடர்புபெறுகிறது.

 

d)     பங்கேற்கும் முகிழ்நிலை ஆசிரியர்கள்/ ஆசிரிய பயிலுநர்கள் வழிநடத்தப்ப்டுவர்.

e)   



தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாடத்தில் அவர்களது கற்பித்தல் இடம்பெறும்.

 

2)     ஆசிரிய மாணவர்கள் பின்வரும் இலக்குகளை எய்துவதற்கு எதிர்பார்க்கப்படுவார்கள்.

 

a)     பாடசாலையின் பௌதிக,மனித வளங்களை அறிந்து கொள்வதுடன் கலாசாரப் பேணுகையில் கொள்ளவேண்டிய அக்கறை தொடர்பாக அறிந்துகொள்வர்.

b)     மாணவர்களின் உளவியல் சம்பந்தமான தமது அறிவை பிரயோகிப்பர்.

c)      ஏலவே தீர்மானிக்கப்பட்ட கற்றற்பேறுகளை அடைவதற்கான வழிவகைகளை செய்முறை ரீதியில் ஆராய்வர்.

d)     மாணவர் பல்வகைமையைக் கருத்திற்கொண்டு ஒரு திட்டமிட்ட ஒழுங்கமைவில் பாடக்குறிப்பைத் திட்டமிடுவர்.

e)     கற்றல்- கற்பித்தல் செயலொழுங்கை முகாமை செய்வர்.

f)       மாணாக்கரின் செயற்பாடுகளையும் தேர்ச்சிகளையும் மதிப்பிடுவர்.

g)     தமது அனுபவ முதிர்ச்சிக்கான வழிவகைகளை ஆய்வர்.

h)     பாடசாலையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படவும் பிற ஆசிரியர்களுடன் சேர்ந்து இயங்கவும் பழகிக் கொள்வர்.

i)       இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்கேற்பதுடன் நடைமுறப்படுத்தலிலும் தம்மை உள்வாங்கிக் கொள்வர்.

j)       சமூக விருத்திச் செயற்பாடுகளிலும் ஆர்வத்தோடு பங்கேற்பர்.

k)     நிர்வாகக் கடமைகளுக்கு ஒத்தாசை புரியும் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.

l)       தேவைக்கேற்ற ஆய்வுத் திட்டங்களில் ஈடுபடுவதோடு மாணாக்கரின் நிலைமைகளைப் புரிந்து பொருத்தப்பாடுள்ள செயல்நிலை ஆய்வில் ஈடுபடுவர்.

m)   நடத்தைகள், நேர் மனப்பாங்கு, பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதற்குரிய சந்தர்ப்பங்களை உருவாக்குவர்.

n)     மாணவரின் கற்றற்றிறனை மேம்படுத்தும் வகையிலான திட்டமிடல்களை உருவாக்குவர்.

o)     தம் மீதான தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புவர்.

p)     சமூகத்தில் வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்க சமூகப் பொருத்தப்பாடுடைய சமூகப் பிரக்ஞையைக் கட்டியெழுப்பப் பழகிக் கொள்வர்.

 

3)     மதிப்பீடும் கற்றலும்.

 

a)      பாரம்பரியக் கற்றலுக்குப் புறம்பாக மதிப்பிடுதலும் கற்றலும் ஒருங்கிணைந்து காணப்ப்டும்.

b)     தொழில் வழிப்படுத்துவோரும் மேற்பார்வையாளர்களும் அடிக்கடி பின்னூட்டங்களை வழங்குவதே துண்டக்கற்பித்தலின் வெற்றியாகும்.

c)      பயிற்சி ஆசிரியர்கள் சமநேரப் பின்னூட்டல்களையும் அதே வேளை அப்பின்னூட்டல்கள் பொதுவாக முறைசார்ந்தும் முறைசாராதும் அமையப்பெறும்.

d)     காலம் குறுக்கப்பட்டுள்ளமையினால், ஆசிரிய பயிலுநர்கள் தொடர்ச்சியாக ஆய்வு, உற்பத்தி மற்றும் பகிர்வுச் செயன்முறைக்கு உட்படும் நிலைமை காணப்படும்.

 

4)     வகுப்பறைச் செயற்பாட்டில் உட்படுத்திய அனுபவம் பெறல்.

 

a)     அனுபவத் திரட்சி மிக்க ஆசிரியர்களின் பாடங்களை அவதானிக்கக்கூடிய வாய்ப்புக் கிட்டும்.

b)     வேலைத்திட்டங்கள் தயாரிப்பதற்க்கான அனுபவம் வாய்க்கப் பெறும்.

c)      பாடக்குறிப்பை உரிய கட்டமைப்பில் தயாரிக்கக்கூடிய முதிர்ச்சி ஏற்படும்.

d)     பாடங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தக்கூடிய பாங்கு ஏற்படும்.

e)     கற்றல்- கற்பித்தல் செயற்பாட்டின் போது பயன்படுத்தக்கூடிய பொருத்தப்பாடுடைய கற்ற்றர் பேறை நிறைவு செய்வதற்கு உதவிபுரிகிற சாதனங்களைபயன்படுத்தும் அனுபவம் கிடைக்கும்.

f)       தனியாள் வேறுபாடிற்கேற்ப கற்பித்தலை வழங்கக்கூடிய அனுபவம் கிட்டும்.

g)     முன்னூட்டல், பின்னூட்டல் போன்றவற்றில் அனுபவம் கிடைக்கும்.

h)     மாணவர் முன்னேற்ற அறிக்கைகள் பேணுதல் தொடர்பான அனுபவம் கிட்டும்.

i)       பரிகார நடவடிக்கைகளை தனியாள் வேறுபாட்டிற்கேற்ப வேறுபடுத்தக்கூடிய அவதானம் கிடைக்கும்.

j)       பிரதிபலிப்புப் பதிவேடுகளைப் பேணுதலின் மூலம் சுய மதிப்பீடும் மேம்படுத்தக்கூடிய உத்தியும் கிடைக்கும்.

k)     சகபாடிகள் மூலம் கற்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

ஆக மேற்படி அனுபவங்களுக்குள் மாணவர்கள் செறித்து உட்படுத்தல் பெறுவதனால் அவர்கள் நடமுறையிலுள்ள விடயங்களை முறையான ரீதியில் விளங்கிக்கொள்வதுடன் தாம் தயாராக்கப்பட வேண்டிய பண்புகளை அளவறி மற்றும் பண்பறி ரீதியில் ஆய்வு அடிப்படையில் விளங்கிக்கொண்டு வினைத்திறனான ஆசிரியர்களாகப் பணிபுரிந்து நாட்டின் ஜீடீபீ (GDP) க்கு வலுச்சேர்ப்பார்கள்.

உசாத்துணைகள்:

1.     1.  கலாநிதி சபா. ஜெயராசா, புதிய கல்விச் சிந்தனைகள்

2.     2.  பேராசிரியர் சி. கணபதி, நுண்கற்பித்தல் ஓர் அறிமுகம்

3.      3. கலாநிதி ஜெயலக்‌ஷ்மி இராசநாயகம், கல்வித் தத்துவம்

4.      4. வரதராஜா, நா, ஆசிரியத்தொழில்

5.      5. உலகநாதர் நவரட்ணம் கற்றல் – கற்பித்தல் செயன்முறையில் கல்வி உளவியல்.

6.      6. பார்வை, (2015), பார்வை வருடாந்த கல்விச் சஞ்சிகை, கல்விப்பீடம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், நாவல, நுகேகொட.

7.      7. ஆசிரியர் கல்வி (2019), ஆசிரிய கல்வியின் தேவை, www.alaveddy.com

Comments