கற்பவர்மைய அணுகுமுறையை மேம்படுத்தும் பொருட்டு ஆசிரிய மாணவர் வினவுதலை ஒரு நுட்பமாகப் பயன்படுத்துவார்


 

கப்டன் பொன்னம்பலநாதன் துஜீவ்

ஆசிரியர் யாழ். இந்துக் கல்லூரி



தேர்ச்சி: கற்பவர்மைய அணுகுமுறையை மேம்படுத்தும் பொருட்டு ஆசிரிய மாணவர் வினவுதலை ஒரு நுட்பமாகக் கையாளுவதற்கு தொழில்வழிப்படுத்துநர் உதவுவார்.

நேரம்: 75 நிமிடங்கள்

வளங்கள்: வர்ண அட்டைகள், நிறப் பேனாக்கள், டிமை தாள், ஸ்மார்ட் பலகை

”முறையான வினவுதல் நுட்பமானது கற்றல் கற்பித்தல் செயன்முறைக்கு மிகவும் இன்றியமைதாததாகும். மாணவர்கள் பாடத்தினை விளங்கிக்கொண்டார்களா இல்லையா என்ற பின்னூட்டலை ஆசிரியர் இலகுவாகப்பெற்றுக்கொள்ள இந்நுட்பம் வழிவகைசெய்கின்றது. அவ்வகையில் நிறுத்தல், கேள்வி உள்ளடக்கம், வினாக்களின் விநியோகம் ஆகியனவற்றின் அறிவு ஆசிரிய மாணவருக்கு அவசியமாகின்றன.”                             
                                                                                             (சண்முகவேலு, க , 2020)

 

”கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டின் போது வினவுதலும் பதிலிறுத்தலும் தொடர்பான பகுதி முக்கியமானது. கேள்விகள் பழைய அறிவுடன் தொடர்புற்றும் விடயக் கேள்விகளான யார், என்ன, எங்கே, எப்போது எனும் கேள்விச் சொற்களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். வடிவமைப்பும் மாணவர் சிந்தனையூடு தூண்டப்படுகின்றன. இவ்வாறான வினாக்களில் விளைவுகள் மிகக் கவனமாகக் கையாளப்பட்டும் எப்படி, ஏன் என்ற கேள்விச்சொற்கள் மூலம் பயன்பாட்டை அறிவதும் தேவையாகிறது.”                                                                 (Farrant , J, S: 1985: 310)

 

 

”வினவுதல் ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியமானதோடு அது மிகவும் சிக்கல் வாய்ந்ததும் கூட. அவை வினைத்திறனாகப் பயன்படுத்தப்பட்டால், மாணவரின் ஆற்றல் அதிகரிக்கும் என்பதோடு கற்றல் – கற்பித்தற் சூழல் சுறுசுறுப்பு வாய்ந்ததாகவும் ஊக்குவிப்பதாகவும் மிளிரும்.”
                                                                                                                           (Eee Ah Meng, 1989: 332)

 

செயற்பாடு 01:

வினவுதல் நுட்பங்கள் எனப்படுபவை என்ன என்பது ஆசிரிய மானவர்களுக்கு அத்தியாவசியமானது. ஆகவே, அவர்களின் முன்னறிவை அறிதற்பொருட்டு வினவுதல் நுட்பங்கள் என்றால் என்ன? அவற்றின் அவசியங்கள் எவை என்ற கேள்விகள் தொழில்வழிப்படுத்துநரால் வினாவப்படுதல் வேண்டும். அவை பின்வருமாறு குறிப்பெடுத்துக்கொள்ளப்பட வழிப்படுத்துதல்.

 

1)         வினவுதல் நுட்பங்கள்

 

1.1  இவை மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை மற்றும் உளச்செயற்பாடுகளைத் தூண்டுவதன் மூலம் இலக்கை அடையப் பயன்படும்.

1.2  மாணவர்களின் சிந்திப்பதற்குரிய இயலளவை அதிகரிக்கும் என்பதோடு தெளிவான யோசனைகள் கற்பனைகளோடு கலக்கப்படுவதற்கும் செயற்பாட்டின் ஊக்கத்தினை அதிகரிப்பதற்கும் பயன்படும்.

1.3  ஆசிரியபயிலுநர் மாணவர்தம் அறிவினை மேலும் வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கும் இந்நுட்பம் உதவிபுரிகிறது.

 

2)         ஆசிரிய மாணவர்களுக்கு வினவுதல் நுட்பத்தின் அவசியம்.

 

1.     கற்றல் – கற்பித்தல் செயன்முறையின்போது வினைத்திறனை நிர்ணயிப்பதற்கும்

2.     கேள்விகளுடையதும் கேள்வி கேட்டலினதும் தரத்தினை உறுதி செய்துகொள்ளவும்

3.     மாணவர்களின் உயர் மட்ட சிந்தனை ஆற்றலைத் தூண்டவும்

4.     சரியான நுட்பங்களைப் பிரயோகிக்கவும்

5.     வகுப்பறையில் ஏற்படச் சாத்தியமான மாற்றங்களை அறிந்து கொள்ளவும்

 

 

 

 

 

செயற்பாடு 02

அந்த மாற்றங்கள் தாங்கள் ஏலவே திட்டமிட்டு வைத்திருந்த திட்டத்தோடும் கற்றற்பேறோடும்  இணங்கிப்போகச் செய்வதற்கும்  அக்கறை கொள்ள அவசியமானவை தொடர்பாக கலந்துரையாடுதல். இது தொடர்பான சட்டகத்தினை உருவாக்குதல் வேண்டும்.

உதாரணம்: வகுப்பிலுள்ள முழு மாணவர்களும் விழிக்கப்படுகிறார்களா?

புள்ளிகள் 5,4,3,2,1 என்ற அடிப்படையில் வழங்கப்படுதல்.

o   அவதானம்

§  ஒரு குறிப்பிட்ட மாணவரைக் கேள்வியெழுப்பும் போது வகுப்பிலுள்ள முழு                     மாணவர்களும் விழிக்கப்படுதல் வேண்டும்.

§  கேள்வியினை முதல் எழுப்பிய பின்னரே எந்த மாணவருக்குரிய கேள்வி அது எனப் பெயர் சொல்ல வேண்டும். இது அனைத்து மாணவர்களும் அக்கேள்வியில் கருத்தூன்ற வழிகோலும்.

§  கையுயர்த்தும் மாணவர்களிடம் மட்டுமல்லாது அனைவரிடமும் கேள்வியை முன்வைக்க வேண்டும். இதன்மூலம் கையுயர்த்தும் மாணவர்களின் செல்வாக்கினுள் ஆசிரிய மாணவர் உட்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். ஆகையால் அனைத்து மாணவர் மீதுள்ள கவனமும் அக்கறையும் உறுதி செய்யப்படும்.

§   இதன்போது கேள்வியைக் கவனிக்காத மாணவர் கேள்வியை மீளக் கேட்பர். அவ்வேளை ஆசிரிய மாணவர் மீளக் கேட்டலாகாது. மீளவும் கேள்வி கேட்பதால் கவனம் குன்றும். ஆக ஒரேயொரு தடவை மட்டும் வினாவுதல் இன்றியமையாதது.

o   குரல்

§  இது மிகமுக்கியமான தொடர்பாடற் சாதனம் ஆகும்.

§கேள்வி கேட்டலுக்கு முன் தமது குரல் தெளிவானதாகவும் கேட்கக்கூடிய உரப்புடையதாகவுமிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

§  கேள்விகள் சிறந்த முறையிலே மாணவர்களை நோக்கியபடி முன்வைக்க வேண்டும். இது மாணவர்களைக் கேள்விகளை நோக்கிக் கவர்ந்திழுக்கவும் விடைகளைப் பெற்றிக்கொள்ளவும் உதவும்.

o   நிறுத்தல்.

§  கேள்வியை எழுப்பியவுடன் ஆசிரிய பயிலுநர் ஒருகணம் பேசுவதை நிறுத்த வேண்டும்.

§  பின்னர் முழு வகுப்பையும் பார்த்தல் வேண்டும்.

§மாணவர்கள் விடையளிக்கத் தயார்நிலையிலுள்ளதைக் கவனிக்க வேண்டும்.

§நேரம் அதிகம் நீள்வதனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நேரநீடிப்பின் போது ஆர்வம் மங்கிவிடும்.

o   கேள்விகளின் உள்ளடக்கம்.

§வினாவெழுப்புதலுக்கான கேள்விகளின் வகைகளை முதலே திட்டமிட்டுக்கொள்ளுதல் வேண்டும்.

§ஆனால் எவ்வாறான வினாக்கள் என முதலே தயாரித்துக்கொள்ளல் வேண்டும் என்ற அவசியம் இல்லை.

§ஆனால் பிரதானமான அச்சாணி வினாக்கள் முன்னரே வடிவமைக்கப்படல் வேண்டும்.

§பாடத்தின் தொடர்புறுதலைப் பெற்றுக்கொள்வதற்கான முறையில் இந்த அச்சாணி வினாக்கள் அமைதல் வேண்டும்.

§தரப்பட்ட பாடத்தில் இவ்வாறான கேள்விகள் எதிர்பார்க்கப்பட்ட திசையைநொக்கி பாடம் செல்லுவதனை உறுதிப்படுத்துதலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

§ஆகையால் இவ்வாறான கேள்விகள் மிக நீண்டவையாக இருத்தலாகாது.

§அத்தோடு மாணவர்களின் வயது மற்றும் இயலுமைகளுக்கேற்றவகையிலே கேள்விகள் தொடுக்கப்படல் வேண்டும்.

§மீத்திறனுடையோரிடம் கடினமான கேள்விகளையும் மெல்லக் கற்போரிடம் இலகுவான கேள்விகளையும் மாணவர் பல்வகைமையின் பல்வகைமையைக் கருத்தில் கொண்டதான வினாவெழுப்பல் நுட்பத்தினைப் பயன்படுத்துதல் வேண்டும்.

§ஆசிரிய மாணவர்கள் விடைகளைக் குறிக்கும் வினாக்களை எழுப்புதல் வேண்டும்.

§வினாக்களிலுள்ள மொழி விள்ங்கப்படுவதற்கு இலகுவானதாக இருத்தல் வேண்டும். ஏனெனில் விளங்காத சொற்களைக் கொண்ட கேள்விகளால் மாணவர் குழப்பமடைவர்.

o வினாக்களின் விநியோகம்.

§அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக வினா எழுப்பப்படுதல் வேண்டும்.

§அவை கற்றல் – கற்பித்தல் செயமுறையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பயன்படுத்துதலை ஊக்குவித்தல் வேண்டும்.

§மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தினை அடிப்படையாகக் கொண்டு வினாவெழுப்புதல் ஆகாது. உதாரணமாக பின்வரிசை மாணவர்கள் கேள்வி கேட்கப்படமாட்டோம் என்ற துணிவில் பாடத்தில் கவனம் குன்றக்கூடும்.

§மாணவர்களிடையே கற்றலொன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் வினாவெழுப்புதலாகாது.

§கேள்வி கேட்டலின் போதும் மாணவர்கள் விடையிறுக்கும் போதும் மாணவர் விடையளிக்கக்கூடிய ஏதுநிலையினை ஆசிரிய மாணவர் உருவாக்குதல் வேண்டும். அவர்கள் சரியான விடைக்கு வருவதற்கு ஆசிரிய மாணவர் வசதியளித்தல் வேண்டும். இது மாணவர்கள் எழுப்பப்பட்ட வினா தொடர்பான ஆழ்ந்த சிந்தனைக்கு வழிகோலும். 

செயற்பாடு 03

கேள்வி மட்டங்கள் தொடர்பான பிரயோக அறிவை உறுதிப்படுத்த பிரயோக ரீதியாயிலான வகுப்பறை அணுகுமுறைகளுக்கு உதவுதல். அதற்கென ஒரு சட்டகத்தைனை உருவாக்கிப் பதிவு செய்தல்.

கேள்வி மட்டங்கள்.

§கேள்விகள் இலகுவானவற்றிலிருந்து சிக்கல் நிறைந்த போக்கிலும் அருவத்தன்மையிலிருந்து உயர்மட்டம் வைக்கும் கொண்டுசெல்லப்படுதல் வேண்டும். அது மதிப்பீடு என்பதாக வகை குறிக்கப்படும்.

o ஆறு வகையான கேள்விகளும் பின்வருமாறு:

§  அறிவு

·அறிவை அடிப்படையாகக் கொண்ட வினாக்கள் மாணவரின் நினைவைச் செரிக்கும் தகவுடையனவாகும்.

·இவ்வாறான தலைப்புக்கள் மாணவரிடத்தே புதிய தலைப்புக்க்ள் மற்றும் யோசனைகளை ஆசிரியமாணவர் கொணரும் பொழுது தெரிவுசெய்யப்படுதல் வேண்டும்.

§புரிதல்

·ஒரு அறிவுக்கு அல்லது கருத்தியலுக்கு வெளிக்காட்டப்பட்டிருக்கின்ற நிலையில் மாணவர்களால் கிரகிக்கக்கூடிய கேள்விகளை ஆசிரிய மாணவர் எழுப்புதல் வேண்டும்.

·அதாவது கற்றல் கற்பித்தலானது புரிதலோடும்  செயற்பாடுகள் தொடர்பான புரிதலோடும் அமைதல் வேண்டும்.

§  பிரயோகம்

வினாக்களினுடைய பின்வரும் இயல்புகள் மாணவர்களின் தகவல் வழங்கலில் உள்ளடக்கப்படும். பிரயோகக் கேள்விகள் மாணவர்கள் கற்றல் – கற்பித்தலூடு பெற்றுக்கொண்ட தகவல்கள் மூலம் பெற்றுக்கொண்ட அறிவைப் பிரயோகிப்பதாக அமையும்.

§  பகுப்பாய்வு

·இவ்வகையிலான கேள்விகள் வேறுபட்ட யோசனைகளில் பயன்படும். உயர்மட்டத்தில் மாணவர்கள் பகுப்பாய்வுக் கேள்விகள் கேட்கப்படுவர் என்பதோடு ஆசிரியமாணவர் அக்கேள்விகளில் அனைத்து வகையான திறன்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை மிகுந்த அக்கறையோடு கவனிக்க வேண்டும்.

§  தொகுப்பு

·இவ்வகையிலான கேள்விகள் மாணவர்கள் தமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ஆரம்பத் தகவல்களோடு புதிய யோசனைகளோடு வரத்தக்கதான உதவியை வழங்கும் வினாக்களாக அமைதல் வேண்டும். இந்த வகையிலான வினாக்களும் உயர் திறனை நாடி நிற்பதுடன் ஆரிரியமாணவரின் உதவி மாணவர் தம் தகவலைத் தொகுக்கும் வரையில் வழிப்படுத்தப்படவேண்டியதொன்றாகும்.

§  மதிப்பீடு

·அதியுயர் மட்டத்தில், மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். மதிப்பீடு என்பது உண்மையில் மாணவர்கள் தமது எண்பிப்பினை எட்டுவதற்கும் காத்துக்கொள்வதற்கும் உரியதொன்றாகும்.

செயற்பாடு 04

வேறு வினவுதல் நுட்ப வகைகள் தொடர்பான அறிவைக் கட்டியெழுப்புதல். பின்வரும் கேள்வி வகைகள் தெளிவான புரிதலோடு பயன்படுத்தப்படுவதனை உறுதிசெய்தல்.

                     i.முதன் வரிசைக் கேள்விகள்

            ·இவை பொதுவாக எழுப்பப்படும் வினாக்களாகும்.

            ·இவை தொடராகக் குறிப்பிடப்படும் ஏனெனில் கற்றல் – கற்பித்தல்

            செயற்பாட்டின் மூலம் வழங்கப்படும் தகவல்களை வெளிப்படுத்தும்

            வினாக்களாகும்.

           ii.திறக்கப்படா வினாக்கள்

 ·மாணவரின் அறிவை படிப்படியாக அசைபோடுந் தகவுடைய வினாக்களாகும்.

 ·இவ்வகையான வினாக்களுக்கு ஆக்கத்திறனுடையதாகவும் மாணவர்களால் எளிதிலே கையாளக்கூடியதுமான தெளிவானதும் இலகுவானதுமான வினாக்களாக அமையப்பெறவேண்டிய தேவை உண்டு. ஆனபடியால், மாணவர்கள் இலகுவில் சோர்வடையாதிருக்க இவை வழிகோலும்.

              iii.          திறந்த முடிவுக் கேள்விகள்

·மாணவர்களினுடைய அறிவு மற்றும் திறனை மதிப்பீடு செய்யும் பொருட்டு

கேட்கப்படும் சுதந்திரம் வாய்ந்த கேள்விகளாகும்.

·மேலதிக தெளிவுக்காகவும் நிச்சயத்தன்மைக்காகவும் இவை

மாணவர்களாலும் கேட்கப்படலாம்.

·இவ்வகையான துலங்கல் மாணவர்களின் புரிதலை ஆசிரிய மாணவர்

அறிந்துகொள்ள உதவி புரியும்.

    iv. மாறுபட்ட கேள்விகள்

    ·மாணவர்களிடையே நிறைந்த சிந்தனைத்திறனை உற்பத்தி செய்யக்கூடிய

    கேள்விகளாகும்.

 ·பெரும்பாலும் அகநிலை சார்ந்த கேள்விகளாக இருப்பதனால்

இவ்வகையிலான வினாக்கள் மாணவர்களின் பரந்துபட்ட சிந்தனைக்குரிய

வாய்ப்பினை ஏற்படுத்தும்.

    ·இவை மாணவர்களின் சிந்தனைத்திறனைத் தூண்டுவத்ற்கு உதவிபுரியும்.

 

செயற்பாடு 05

பிரயோகிக்கப்பட்ட அறிவு தொடர்பான முடிபு ஒன்றுக்கு கலந்துரையாடல் மூலம்  வருதல்.

 

கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டினூடு அறிவு, திறனின் தேர்ச்சிக்காக வினவுதல் நுட்பமானது முக்கியமானது. மாணவர்களின் ஆர்வத்தினையும் கற்றல் ஆர்வத்தினைத் தூண்டுவது இக் கேள்விகளாகும். இவை மாணவரின் உந்துவிசைக்குரிய காரணிகளாக அமைவதோடு விமர்சனரீதியிலானதும் ஆக்கத்திறன் மிக்கதுமான சிந்தனையினைத் தூண்டி அவர்தம் மேம்பாட்டுக்கான விசையினையும் தோற்றுவிக்கின்றன. மேலும், இவை கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டில் மாணவர்கள் ஆர்வத்தோடு ஈடுபடவும் உயர்நிலைச் சிந்தனையில் நிபுணத்துவம் பெறவும் (Higher Order Thinking Skills) தூண்டும். வினாவுதல் நுட்பினூடாக மாணவர்தம் புரிதலை இயலுமையாக்கி அவர்தம் சிந்தனையை உயர் மட்டத்திற்குத் தூண்டி முக்கியமான உள்ளடக்கங்களை அவர்களுக்கு விளக்குவதற்கு ஆசிரியமாணவர்களுக்கு பெரிதும் உதவி புரியும். ஆகையால், வினாவுதல் நுட்பங்கள் மிகுந்த அக்கறையோடு செயற்படுத்தப்படுவதுடன் பூகோளரீதியிலான தேர்ச்சிகளை மாணவர் பெற்றுக்கொள்வதற்கு வழிகோல வேண்டும்.

பின்னூட்டலுக்கான நன்றி: 1.Prof. N. Shan

                                                         2.  Thanuja . D


 


Comments

Popular Posts