மாற்று நீ உன்னை மாற்று....
நேற்று நீ நடந்தாய் தானே!- இன்று
சேற்றிலேன் தவழ லானாய்?
ஊற்றியே உதிர்ந்து போகும்
ஊதியே உதிர்ந்து போகும்
போக்கெலாம் பிடிக்குதில்லை-என்
வாக்கெலாம் உனக்குத் தொல்லை
நாக்கென ஒன்று எனக்கென உள்ளதனால்
ஆக்கிடும் அரும்பையெல்லாம்
வேக்கிட விடுவன் நானோ?
காக்கு மென் கரங்களுன்னை
ஆக்கு மொரு மனிதன் தன்னை!
கருவிலோர் செடியாய் உன்னை
இருவிரல் கொண்டு தடவி- அன்னை
தருவிலுன் உருவைக் கண்டு
நெருடிடும் உணர்வு பாராய்!
தெருவில் நீ திரியும் போது
பொருதிடும் மனதைப் பாராய்!-இன்னும்
அருகிலுன் விருப்பைக் காணா
கருகிடும் விருப்பை காணாய்!
காற்றிலும் சுடரு முந்தன்
போற்றிடும் புலமை யன்றோ?
மாற்று நீ உன்னை மாற்று
வேற்று தீ உன்னைக் கொன்றால்
ஆற்றுவா ரெவரோ அழுவா ரெவரோ?
ஊற்றென உணர்வு எல்லாம்- பறை
சாற்றிநின் றெழுந்தால் தானே
சோற்றிலும் சுவையும் சேரும்!
நாற்றிசை எமக்கும் மீளும்!!
-அருள்நிலவன்
சேற்றிலேன் தவழ லானாய்?
ஊற்றியே உதிர்ந்து போகும்
ஊதியே உதிர்ந்து போகும்
போக்கெலாம் பிடிக்குதில்லை-என்
வாக்கெலாம் உனக்குத் தொல்லை
நாக்கென ஒன்று எனக்கென உள்ளதனால்
ஆக்கிடும் அரும்பையெல்லாம்
வேக்கிட விடுவன் நானோ?
காக்கு மென் கரங்களுன்னை
ஆக்கு மொரு மனிதன் தன்னை!
கருவிலோர் செடியாய் உன்னை
இருவிரல் கொண்டு தடவி- அன்னை
தருவிலுன் உருவைக் கண்டு
நெருடிடும் உணர்வு பாராய்!
தெருவில் நீ திரியும் போது
பொருதிடும் மனதைப் பாராய்!-இன்னும்
அருகிலுன் விருப்பைக் காணா
கருகிடும் விருப்பை காணாய்!
காற்றிலும் சுடரு முந்தன்
போற்றிடும் புலமை யன்றோ?
மாற்று நீ உன்னை மாற்று
வேற்று தீ உன்னைக் கொன்றால்
ஆற்றுவா ரெவரோ அழுவா ரெவரோ?
ஊற்றென உணர்வு எல்லாம்- பறை
சாற்றிநின் றெழுந்தால் தானே
சோற்றிலும் சுவையும் சேரும்!
நாற்றிசை எமக்கும் மீளும்!!
-அருள்நிலவன்
Comments
Post a Comment