விக்கிரமசிங்ஹ அய்யே!

விக்கி அய்யா!
நீ என் உடன்பிறவாச் சகோதரன்
நான் உன்னிடம் கடன்படவில்லை
எனினும், உன் அன்புக்கு
கட்டுப்பட்டவன்
ஏனெனில், நான் அழுதபோது
எனக்காக போதி மரத்தடியில்
பிரார்த்தித்தவன் நீ!
 துஜீ மல்லி! என்ற வார்த்தையை
அர்த்தப்ப்டுத்திச் சென்றவன் நீ!

பச்சை வரியில் நீ இருந்தபோது
நியாயமாக
உன் இனத்துக்காக நீ போராடினாய்....
நீ ஒரு வீரன்!
உனக்குத் தெரிந்த
விடுதலையின் பால் வேரோடியவன்!
உன் சகாக்களைக் கண்டு நான்
நின்று நிதானித்த போது
உன்னிடம் அழைத்து
பசுமை புகுத்தியவன் நீ!

எச்சில் கையாலும் விசிறார் முன்
பச்சைக் குழந்தையாய் என்னைப்
பார்த்துக்கொண்டவன் நீ.
 உன்னைப் பகைக்க
என் இதயம் உன்னவில்லை
நீ அறியாய்.... அய்யே!
உன் பிள்ளைகள்
சிறியேன் என் காலில் விழுந்தனர்
அறியார் அப்பிள்ளைகள் எப்பாவமும்!

உன் ஏழ்மையை
தொழில் நிமிர்த்தியது
உன் வாழ்க்கை
வடக்கோடே வழக்கொழிந்து போனது!
நீ இன்னமும் வடக்கிருத்தலோடு
வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்
வாசம் வீசும்
ஒரு குங்குமச் செடியாக!!

Comments