எவர்க்கானது இந்த உலகம்?

எனக்கானதென்பார் இந்த உலகம்
இல்லையில்லை எனக்கானதேயென்பார்
இன்னும் சிலர்....
எமக்கானதென்பார் அற்ப சிலர்
இன்னுமின்னும் இந்த உலகம்
விந்தையோடு தான் விரிந்து கிடக்கிறது!

அந்தோ தனதென்ற அவனுமில்லை....
எனதென்ற இவனுமில்லை
எமதென்றோர் மட்டும்
இன்னுமின்னும் மிச்சமாய்....
எனகென்று வாழ்வோர்- வீழ்வார்
ஓர் நாள்!
தெமதென்றொ வாழ்வோர்
ஆள்வார் பல நாள்....

ஆற்றங்கரையில் ஆலமரம்
வீற்றிருந்தால் சென்று பாரும்
மாற்றமில்லா மனதைத் திறவும்
நேற்று அடித்த காற்றையும்
முந்தநாள் பெய்த மழையையும்
பீற்றிக்கொள்ளும்!-அந்த நாளில்
எந்த நாளும் விந்தை தானே....!

பெய்த மழை இன்று பொய்த்தது!
ஆலமரத்துச் சாலரத்தில்
கோலமிட்டு வாழ்ந்த
குருவி, ஆந்தை, காகம், குயில்
கூடும் விந்தை! எல்லாம் முந்தை!
கூடுமில்லை, குருவியில்லை
அருவியில்லை- ஆதலால்
ஆறும் இல்லை ஆல மரமும்
இல்லை.....!

தெருவின் மருங்கில் நின்றோர்
 புழுதி முழுகி நின்றோர்
வியிலில் வெளீயில் நின்றோர்
உருகி வியர்த்து வெந்தோர்!

தம்பி நீர் அருகில் வாரும்!
அட நீர் தான்....!
எனது என்றீரே?
எது உமது??
புழுதியா, புழுக்கமா?
புழுக்களில்லாப் பூமியா?
பதில் சொல்லும்,,,,

அறிந்தால் எமதானதென்று
இனியாவது நில்லும்.....
உண்மையொடு உலகை
வெல்லும்....
தண்மையெழில் கொண்ட
பொழில் ஒன்றை
சிருஷ்டியும்....!
பகுத்தறிவாளன் நீர்
படக்கவும் முடியும் உம்மால்!
உடைக்கவும் முடியும்!

-அருள்நிலவன்
சுடர் ஒளி
பக். 15

நவ05-நவ 11/2014

Comments