சிலுவைப் பாதை

அக்கினிக் குஞ்சென்று கொண்டேன்-அதில்
அகிலமுயர்த்தும் உக்கிரம் கண்டேன்.
பட்டிழுத்தாயினும் பாலைப் பசுமையை
சேயிலும் சிறியோன் சிரத்தில் கொண்டான்.
ஓயினும் ஒருவனாய் அவனே நின்றான்.
தேயினும் பிறையாய்(த்) திரமாய்த் தெரிந்தான்.

நித்திரையாயினும் நிமிர்ந்து தான் மேவினும்
செத்திரையாயினும் சேர்ந்துலங்(கி)கேகினும்
சொத்துரையாகவே சேதிகள் சொன்னான்-அவன்
இத்தரை மீதினில் சத்தியமானான்.


-அருள்நிலவன்

Comments