அலைமோதுது மனசு.....

படைப்பிலை அவன் இறைவன்
பாருக்கு அவன் தலைவன்
ஊருக்கு ஏனடி உபதேசம்?- எண்டா
வாருங்கோ வந்து பிறவுங்கோ.....

நேத்துத் தான் காத்தடிச்சது
முந்தநாத்து மழை பெஞ்சது
இந்தா பாரு நானும் வந்திட்டன்
வந்ததாலை வாழ்க்கையும் கண்டிட்டன்.....

சோவெண்டு அடிச்சது மழை
இருட்டி வெருட்டிச்சு ராவு
சுழட்டித் தான் காட்டிச்சு சூறாவளி
சுந்தரனும் வெருண்டநான் கண்டியளோ.....?

மெள்ள மெள்ள நான்
அள்ளிப்பாத்தன் சருவத்திலை
கிள்ளுப்படுமே கொள்ளைத்தண்ணி?
துள்ளி விழுந்திட்டன்- தூக்க ஆளில்லை......

பள்ளிப்பருவம் பக்குவப்படா வயசு
பல்லு விழுந்து, முளைக்கும் பருவம்
ஒண்டுக்குப் போக கூட தெரியாது- எண்டதாலை
அண்டைக்கு வெருண்டிட்டன்.....

காலம் மாறுது - இப்பவும் காத்தடிக்குது
பொல்லாத மழையும் பெய்யுது-வல்லோனா
மாற எங்கிருந்தோ ஒருவன் உன்னோடும் வருவான்!!
வேறையென்ன? -எல்லாமே மாறும்....!


ஏணிப் படியேத்த- வாடிய என் மனமுஞ் சொரிய
ஆணித்தரமா அறைஞ்சு சொல்ல
தேடிப்பிடிச்சு வந்தான் ஒருத்தன்
எட்டிப்பிடிச்சன் - புளியங்கொப்பை.....

வழுக்கும்  பாறையில் வழிதெரியாப் பாதையில்
புதைக்கும் சேத்தில் - புத்தகதோடு நெளிந்த என்னை
அழுங்குப் பிடியில் அழைத்துச் சென்று
வாழ வகை செய்தான்-அந்தப் புண்ணியவான்!

ஓரங்கட்டியவன் ஒண்டா நிண்டான்
சண்டியனும் வணக்கஞ் சொன்னான்
ஒண்டுமில்லை உலகம் உப்பிடித்தான்
வெண்டிடலாம்- வாருங்கோ வந்து பிறவுங்கோ.....


இப்ப நான் அப்போதே மா(தி)ரி
அப்பாவிப் பொடியனில்லை
அப்பாவாகும் வயது- ஐயோ
அருவருப்பே- அப்ப தள்ளிப் இருங்கோ!!

எட எல்லாத்தையும் உங்களுக்கு
எடுத்துச் சொல்ல இன்னும்
நான் என்ன - இளிச்ச வாயனே?
நல்லா வளந்திட்டன் - நானும் திருந்தீட்டன்!!

பின்னை வாருங்கோ வந்து பிறவுங்கோ....


-அருள்நிலவன்





Comments

Post a Comment

Popular Posts