19.01.2011 அன்று திருமணபந்தத்தில் இணையும் எமது அன்புச்சகோதரி தர்சியாவுக்கொரு வாழ்த்துச்செய்தி
பண்ணொடு பதங்கள் செய்வாள்
பணிவெனும் விதங்கள் கொள்வாள்
எண்ணொடு எழுத்துச் சொல்லும்-நல்லாள்
அணியது ஒன்பதின் தர்சியா என்பாள்
நேற்றுவரை மாற்றங்களின் அணிவகுப்பில்
பாட்டில் பணியில் நாட்டிய மிடுக்கில்
அரங்கத்தின் அடிநுனித் துளாவலில்
ஆ(க்)கியது உன் அடிநாதம்
இனிமையாய்க் கடந்தன
இரண்டொடு ஓராண்டு
இனியுன் ஈரநெஞ்சத்தின்
முழுமையிலினியன் கிரிதாஸ்
நேற்றுப் போல் இன்றுபோல்
என்றென்றும் எண்ணம்போல்-ஏற்றமுற்று
நாற்றுமுளை விருட்சமாய்
வளர வாழ்த்துகிறோம்
என்றும் அன்புடன் துஜீவண்ணா with college companions
Comments
Post a Comment