இதய துடிப்பின்- கவிதைத் துடிப்பு
பாசம் என்பது வேசம் இன்றி...
நீ..நான்.. ஏன் அனைத்து ஜீவனும்...
பெற முடிந்த ஒரே இடம் தாயிடம் மட்டுமே...
அம்மா என்று சொல்லிப் பார்...
நீ கடவுளை உணர்வாய்...
நீ தூயவன் ஆவாய்...
பாசம் என்பதின் தொடக்கம் நீ அம்மா...
எனக்கு நோய் துன்பம் எது வந்தாலும்...
உன் மடியில் என் தலை வைத்து...
உறங்கிய போது மறைந்தது...
நீ மறு ஜென்மம் கண்டு...
என் ஜனனம் தந்தாய்...
அன்று முதல் இன்று வரை...
உன் பாசம் சலிக்கவில்லை...
நட்பு, காதல் இங்கும் நாம் தேடுவது...
நீ தந்த அதே அன்பு மட்டுமே...
நான் சேயான போது தாயாகி...
இன்று வரை எனை காத்தாய்...
நீ சேயாகும் போது நான் தாயாகி...
உனை காப்பேன் அம்மா...
இந்த கவிதையை என் தாய்க்கு நான் வாசித்து காட்டினேன்
என் தாய் கண்களில் கண்ணீர் நிறைய எனை தழுவி
முத்தம் தந்தார் நான் மீண்டும் பிறேந்தேன் இன்று
நான் அவர் கண்களில் என் மகன் என்னை பார்பான்
என்ற நம்பிக்கை இன்று பார்த்தேன்
என் தாய் இக் கவிதை எழுதி தரும் படி கேட்டு
எழுதி கொடுத்தேன் சந்தோசம் அடைந்தேன்
தாய் தந்தை அநாதை போல் விடுதிகளில் விடுவோரே!
அந்த நொடியிலேயே நீவிர் மரணிக்கின்றீர்.
I LOVE YOU AMMA...I LOVE YOU AMMA...I LOVE YOU AMMA...
SAANTH-THE HEART BEAT
Comments
Post a Comment