நிலவே நீ வருக...........
நிலவே நீ வருக!
நித்திலத்தில் உன் வரவு
நித்திரையில் முழுநிலவு
சத்தியமாய்ச் சொல்லுகிறோம்
சத்திரத்து மக்களோடு
சாப்பட்டுப் பொழுதில் -நீ
சல்லபிப்பாய் அழகுடனே!
நாளை
நீ வரும் போது
நம்மில் மாற்றங்கள்
நர்த்தனமாடும்
நாமறிவோம்;
நான்-நாம் என்றாகி
நலன் புரிக் கயிறுகளாய்
எங்கோ ஒரு மூலையில்
நற் காரியத்திற்காய் வரியப்பட்டு......
ஏதோ ஒரு
கருமத்திற்காய்
நினது மறைவு இருக்கிறது
ஆயினும்,
நீ
ஒரு தினம் வருவாய்;
எம்முன்னோர்
மூட்டியதீயாய்
நீ
முன்னிருக்க
மகிழ்ந்திருப்பர்......
இந்தப் பிறப்பினில்
நாங்கள் இழக்கப் படுகின்றோம்
இனியொரு
புது வரவுக்காய்
எம்
பயணத்தின் ஆரம்பம்!
சில வேளை-இனிய
உனக்கு அருகாயுமிருக்கலாம்!
நிலவே!
எம்மினிய சோதரரும்
நாளைய சரித்திரம்-உன்னால்
உணரட்டும்!
நீயே சேதி சொல்க!
நாளைய வரவிற்காய்
நாட்களை நகர்த்திக் கொண்டு நாம்.......
2008 ல் கல்வியியற் கல்லூரியில் பரிசு பெற்ற கவிதை
Comments
Post a Comment