ஏகாந்தம் (தனிமை)


என்,
பிள்ளை வயது தொட்டு
மற்றையவர் போலே
நடந்ததுமில்லை, இருந்ததுமில்லை;
எல்லோருக்கும் பொதுவான
வசந்தப் பொழுதுகளுக்கு
அப்பால்...........
என் ஆவல்கல்ளோடு என்னால்
வெளியேற இயன்றிருக்கவுமில்லை!


அதே
ஆதிமூலத்திலிருந்து
நான் துக்கித்தேனுமில்லை;
என் இதயத்தை
ஒரே தொனியில் வைத்து
மகிழ்விக்க
முடிந்திருக்கவுமில்லை!
நான் நேசித்தது எல்லாமே
இந்தத் தனிமையைத் தானே!
இதே
மர்மமே இன்னும்
என்னுள் பிணைக்கப்பட்டிருக்கின்றது.


பிரவாகித்து ஓடும் நீரோடையில்
அன்றி,
பீரிட்டுப் பாயும் தண்ணீரிலிருந்து,
அன்றி,
என்னைச் சுட்டி நிற்கும்
சூரியனிலிருந்து,
இந்த இளம் பொன்னிற
இலையுதிர் காலத்தில்,
இடியுடன் இணைந்த
புயற் காற்றிலிருந்தும்...........
ஆகாயத்து வெளி
மின்னல்
ஒருவனைக் கடந்து
பறந்து போனதால்,
(மீதமாய் எஞ்சிய சுவர்க்கம்
நீலம் போர்த்த போது);
எனது
பார்வையில்
ஒரு
பிசாசு போன்று...........

அருள்நிலவன்
THANKS : "Poe"
'ALONE' என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு

Comments