சுமையேறும் வசந்தஙகள்


நண்பன் ஒருவன்
எனக்காக அருகில்லை
உண்மைகள் அவனுக்குப்
புரியாத புதிராக
அண்மித்துப் பழகும்
வெண்மன நினைவுகளில்
நிலைகெட்ட மனிதரின்
புண்படுத்தும் நியாயங்கள்


நிசப்தத்தைக் கடக்கும்-உன்
நினைவு நிழற்குடையில்
நண்பனே!
என் கண்ணீரின் காத்திருப்புக்கள்.........
உன் மீது அல்லடா உருக்கம்
என் மீது மட்டுமே-என்பதால்
தசைகள் தனாடவில்லை எனினும்
தளர்ந்து தானாய் ஆடின
இதயமும் ஈரற்குலையும்
சிவந்து மறுக் கொண்டன!


உனது வரவு நோக்கி
தெம்பு மட்டும் இருக்கிறது
விடியலைத் தேடிக்
காத்திருப்புகள் உனக்காக;
கருகிப் போன சாம்பலுக்குள்
நீரை எங்கு தேடுவது???

Comments