தாய் மகனுக்கு
கேள் மகனே!
என் வாழ்வு ஒரு தெளிந்த படிக்கட்டு அல்ல.தொய்வுகள் தோய்ந்தும்,
பிளவுகள் துருத்தியும்,
பலகைகள் சிதிலமடைந்தும்,
தரையது கம்பளம் விரிக்காது-
வெற்றுப் போர்த்தியும்.
எனினும் நான் தொடர்ந்தும் ஏறிக் கொண்டிருக்கிறேன்,
சிற்சில பொழுதுகளில் சம தரையைச் சந்தித்தும் ,
மூலைகளில் முடுக்கியும்,
இருட்டிலும்,
வெளிச்சம் இல்லாத பேரிருளிலும்
தொடர்கிறது என் பயணம்.
இன்னும் சிறுவன் நீ , மகனே! நீ திரும்பிப் போகாதே.
நீ படிகளில் தடம் பதிக்க வேண்டாம்
ஏனெனில் மிகவும் கடினமானது இதுவென்று - கண்டாய்.
நீ விழுந்தெழும்பும் பொழுது இதுவல்ல -மகனே!
நான் இன்னும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்
படிக்கட்டுகளில் ஏறிய படி,
வாழ்வு ஒரு தெளிந்த படிக்கட்டல்ல எனத் தெரிந்தும்.....!
லாங்ஸ்டன் ஹியூக்ஸ்
- தமிழில் கப்டன் துஜீவ்
Comments
Post a Comment