திருக்குடும்ப கன்னியர்மடம் (தேசிய பாடசாலை தரம் 7C ஐச் சேர்ந்த என் பிள்ளைகளுக்கானது இந்த பா)
என் அன்புக் குழந்தைகளே! உன்னதம், மகிமை உங்களால் உணர்ந்தேன்.... கலங்கிடச் செய்த என் செல்வங்களே உலகில் கண்டிலேன் உங்களைப் போல.... அனைவருமாய் விம்மினீர்கள் எனைவிட்டு ஆவி அந்தரித்ததுகாள்!
சிறு குழந்தை போல என்னால் அழுதிட முடியுமா?? மறு பிறப்பொன்று காணின் தந்தையாய் ஆவேன்! காலில் விழுந்தெழும்புவது எனக்கு ஒவ்வாது-தெரிந்திருந்தும் பாலின் அமுதமென பாசம் காட்டிநின்றீர்.... என் சொந்தப் பிள்ளையோடும் உம்மை ஒப்பிட்டீர் வெம்மை என் நெஞ்சைத் தின்றது காண்!
தனித்திருந்தேன் தேம்பினேன் பனித்திருந்து உங்களுக்கோர் உயர்வு வரம் கேட்டேன் சனித்து நின்ற துளிகளெல்லாம் துரவு நீரானது பார்! என் அகமெல்லாம் ஆயிரம் வாழ்த்துப்பா அன்பினால் அனைத்துமே உங்களுக்காய் இந்த அப்பா-எனை ஏற்றுக்கொள்ளும் என் உற்ற பிள்ளைகாள்!
மீண்டுமாய் என் காற்றடம் ஒற்றி சோதிக்கிறீர்கள் வாண்டுகள் உங்களால் உழல்கிறேன்.... கண்மணிகளே.... காவியங்களே..... மின்மினிகளே... மிஞ்சிய வரலாறுகளே! துஞ்சிய உங்கள் கண்களைத் துடையுங்கள் நீங்கள் அழுததாலும் எனைத் தொழுததாலும்-அன்றி ஆழ்மன உணர்வுகளே என்னை வீழவைத்தவை....!
என்றும் என் வீரக் குழந்தைகளே! உங்களுக்கானதாய் அழியாத அங்குலம் பாய்ந்த தடமொன்று உண்டு எங்கே சென்றாலும் அங்கே நீவிர் இருப்பீர்!
-இங்ஙனம் உங்கள் அன்பு ஃபாதர் துஜீவ்
என் பிள்ளைகள்:
அபிஷா
மதுஷா
சியோமி
நிதர்சனா
செரின்
சானுஜா
ஷைனுகா
நிதுஷா
ஸ்ரெஃபி
றெபெக்கா
ஜோதிகா
டிலுக்ஷி
லுசினா
விவேகா
அனற்றா
ஜீவிதா
கஜிதா
அர்ஜனா
நீருஜா
றொசின்ரா
ஆகியோர். உங்கள் உள்ளுணர்வும் பற்றுதலும் பெறுமதியானவை....
Comments
Post a Comment